தங்க விலையில் வரலாறு காணாத உயர்வு: பவுனுக்கு ரூ.1,040 ஏற்றம் – ரூ.86,160-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் இருமுறை அதிகரித்து, இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியது. பவுனுக்கு ரூ.1,040 உயர்ந்து ரூ.86,160-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சர்வதேச பொருளாதார சூழ்நிலை காரணமாக தங்க விலை உயர்வும், சரிவும் ஏற்படுகிறது. அதன்படி, செப்டம்பர் 6-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.80,040-ஆக இருந்தது. பின்னர், செப்டம்பர் 23-ம் தேதியளவில் அது ரூ.85,120-ஆக உயர்ந்தது. அமெரிக்கா எச்1பி விசா கட்டணத்தை உயர்த்தியது, ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக குறைந்தது போன்ற காரணிகள் தங்க விலை உயர்விற்கு காரணமாகின.

அடுத்து இரண்டு நாட்கள் விலை குறைந்திருந்த நிலையில், செப்டம்பர் 26 மற்றும் 27-ம் தேதிகளில் தங்கமும், வெள்ளியும் திடீரென அதிகரித்தன. குறிப்பாக, வெள்ளி விலை வரலாறு காணாத உயர்வை எட்டியது.

நேற்று காலை தங்கம் பவுனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.85,600-ஆக இருந்தது. மாலையில் மேலும் ரூ.560 உயர்ந்து ரூ.86,160-ஆகியது. இதனால் ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,040 ஏற்றம் பதிவானது. ஒரு கிராம் தங்கம் ரூ.130 உயர்ந்து ரூ.10,770-க்கு விற்கப்பட்டது.

அதேபோல், வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.160 ஆனது. கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,000 அதிகரித்து ரூ.1.60 லட்சமாக விற்பனை செய்யப்பட்டது.

Facebook Comments Box