ஒரே நாளில் இருமுறை உயர்ந்த தங்கம் விலை – பவுனுக்கு ரூ.720 ஏற்றம்

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.1) ஒரே நாளில் இருமுறை உயர்ந்து, ஒரு பவுன் ரூ.87,000-ஐ கடந்துள்ளது.

சர்வதேச பொருளாதார நிலைமை, அமெரிக்க டாலருடன் ஒப்பிடுகையில் இந்திய ரூபாயின் மதிப்பு குறைதல், அமெரிக்கா இந்தியப் பொருட்களுக்கு விதித்துள்ள 50% இறக்குமதி வரி, உக்ரைன்–ரஷ்யா போர், இஸ்ரேல்–ஹமாஸ் மோதல் போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் காண்கிறது.

கடந்த 26-ம் தேதி முதல் தங்கம் விலை தினந்தோறும் உயர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், இன்று காலை கிராமுக்கு ரூ.30, பவுனுக்கு ரூ.240 உயர்ந்தது. இதனால் தங்கம் விலை பவுனுக்கு ரூ.87,000-ஐ கடந்தது.

ஆனால், பிற்பகலில் மீண்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.480 உயர்ந்தது. இதனால் தங்கம் தற்போது பவுனுக்கு ரூ.87,600-க்கு, கிராமுக்கு ரூ.10,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனால், இன்று மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.720 அதிகரித்துள்ளது.

Facebook Comments Box