காலையில் குறைந்த தங்க விலை மாலையில் உயர்வு: பவுன் ரூ.88,000-ஐ நெருங்கியது

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.2) காலை கிராமுக்கு ரூ.70 குறைந்த நிலையில் இருந்தது, மாலையில் அதே அளவு ரூ.70 உயர்ந்தது. இதன்படி சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,950 மற்றும் பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு பவுன் ரூ.87,600 விலையில் விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற காரணங்களின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரி, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் மாற்றம், உக்ரைன்-ரஷ்யா போர் மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் ஆகிய காரணங்களால் தங்க விலை அதிகரித்து வருகிறது.

கடந்த 26-ம் தேதி முதல் தங்க விலை தொடர்ந்து உயர்ந்த நிலையில் இன்று காலை சற்று குறைந்தது. ஆனால் மாலையில் கிராமுக்கு ரூ.70 உயர்ந்ததால், ஒரு கிராம் ரூ.11,000-ஐ நெருங்கியது. நகை வாங்குவோர் இதனால் அதிர்ச்சியடைந்துள்ளனர். வெள்ளி ஒரு கிராம் ரூ.163 விலையில் விற்பனையாகிறது.

Facebook Comments Box