எச்1பி விசா கட்டண உயர்வால் இந்தியாவில் வேலைகளை மாற்ற அமெரிக்க நிறுவனங்கள் பரிசீலனை

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் செப்டம்பரில் வெளியிட்ட புதிய விதிமுறைகளில் எச்1பி விசா கட்டணத்தை 1 லட்சம் டாலராக (இந்திய மதிப்பில் சுமார் ரூ.88 லட்சம்) உயர்த்தியுள்ளார். இதுவரை 2,000 டாலர் இருந்து 5,000 டாலராக உயர்த்திய கட்டணத்தை தற்போது பலமடங்கு அதிகரித்ததால், திறமையான வெளிநாட்டு தொழிலாளர்களை சார்ந்த அமெரிக்க நிறுவனங்களுக்கு இது பெரிய சவாலை உருவாக்கியுள்ளது.

இதற்கிடையில் அமெரிக்க செனட் சபையில் சம்பந்தப்பட்ட மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ட்ரம்பின் விசா கட்டுப்பாடுகள் காரணமாக, அமெரிக்க நிறுவனங்கள் ஏஐ, தயாரிப்பு மேம்பாடு, சைபர் பாதுகாப்பு, தரவுப் பகுப்பாய்வு போன்ற உயர்நிலை வேலைகளை இந்தியாவில் மாற்றுவது குறித்து தீவிர பரிசீலனை செய்து வருகின்றன.

வல்லுநர்கள் தெரிவிப்பதாவது, இது உலகளாவிய திறன் மையங்களின் வளர்ச்சியை (GCC) ஊக்குவிக்கும். இந்தியாவின் ஐடி துறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 8% பங்களிப்பை வழங்கி, 283 பில்லியன் டாலர் மதிப்பில் சேவை செய்கிறது. ட்ரம்பின் முடிவு இந்த துறைக்கு தாக்கத்தை ஏற்படுத்தினாலும், GCC சேவைகளின் அதிகரிக்கும் தேவையால் இதன் பாதிப்பை குறைக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Facebook Comments Box