எம்3எம் ஹுரூன் இந்தியா பணக்காரர் பட்டியல் 2025: இளம் பில்லியனர் பட்டியலில் அரவிந்த் ஸ்ரீனிவாஸ்

சென்னையில் பிறந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ், 31 வயதில் நாட்டின் இளம் பில்லியனர் பட்டியலில் இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளார்.

எம்3எம் ஹுரூன் இந்தியா பணக்காரர் பட்டியல் 2025’ வெளியாகியுள்ளது. இதில் ரூ.1,000 கோடிக்கு மேல் சொத்துக்களை வைத்த 1,687 பேர் இடம் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 284 பேர் கூடுதலாக இணைந்துள்ளனர், இதில் 148 பேர் புதியவர்கள்.

இந்த பட்டியலில் முதன்முறை இடம் பிடித்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ் சொத்து மதிப்பில் ரூ.21,190 கோடி வரை உயர்ந்துள்ளார். மேலும் 1 பில்லியன் டாலருக்கு மேல் (ரூ.8,900 கோடி) சொத்து வைத்த 350 இளம் இந்தியர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். ஸ்டார்ட்-அப் நிறுவனம் பெர்ப்ளெக்சிட்டியின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஸ்ரீனிவாஸ், செயற்கை நுண்ணறிவு துறையில் தகவல் தொடர்பு முறையை வேகமாக மாற்றி வருகிறது.

முகேஷ் அம்பானி முதலிடம்:

இந்த பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி (68), ரூ.9.55 லட்சம் கோடி சொத்துடன் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த அதானி குழும தலைவர் கவுதம் அதானி ரூ.8.14 லட்சம் கோடியுடன் 2-வது இடம் பெற்றுள்ளார்.

ஏலைய இடங்கள்:

  • ரோஷினி நாடார் (ஏசிஎச்.எல்) – ரூ.2.84 லட்சம் கோடி – 3-ம் இடம் (முதல் முறையாக)
  • சைரஸ் புனாவல்லா – ரூ.2.46 லட்சம் கோடி – 4-ம் இடம்
  • குமார் மங்கலம் பிர்லா – ரூ.2.32 லட்சம் கோடி – 5-ம் இடம்

இந்த பட்டியலில் உள்ள பணக்காரர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ.167 லட்சம் கோடி ஆகும், இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 50% அளவை பிரதிபலிக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சராசரியாக வாரந்தோறும் ஒருவர் புதிய பில்லியனர் பட்டியலில் இணைந்து வருவதாக ஹுரூன் குறிப்பிட்டுள்ளது.

Facebook Comments Box