கோயம்பேடு சந்தையில் பீன்ஸ், நூக்கல், கோஸ் விலை உயர்வு
சென்னை கோயம்பேடு மொத்த சந்தையில் பீன்ஸ், நூக்கல், முட்டைக்கோஸ் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக குறைந்த விலையில் விற்கப்பட்ட காய்கறிகள், தற்போது மீண்டும் விலை ஏற்றம் கண்டுள்ளன.
கடந்த வாரம் வரை கிலோ ரூ.25-க்கு விற்கப்பட்ட பீன்ஸ் தற்போது ரூ.60 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் நூக்கல் ரூ.15-இலிருந்து ரூ.30-ஆகவும், முட்டைக்கோஸ் ரூ.5-இலிருந்து ரூ.10-ஆகவும் அதிகரித்துள்ளது.
விலை உயர்வுக்கான காரணம் குறித்து கோயம்பேடு சந்தை வியாபாரிகள் தெரிவித்ததாவது:
“தற்போது புரட்டாசி மாதம் என்பதால், பலர் அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை அதிகமாக உட்கொள்கின்றனர். இதனால் காய்கறிகளின் தேவை அதிகரித்து, விலைகளும் உயர்ந்துள்ளன,” என்று தெரிவித்தனர்.
Facebook Comments Box