‘பாஸ்டேக்’ இல்லாதவர்களுக்கு யுபிஐ சலுகை: 1.25 மடங்கு கட்டணம் போதுமானது!

பாஸ்டேக் வசதி இல்லாத வாகன ஓட்டிகள் இனி யுபிஐ மூலம் சுங்கக் கட்டணம் செலுத்தினால், வழக்கமான தொகையின் 1.25 மடங்கு மட்டும் கட்டினால் போதும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) நாடு முழுவதும் உள்ள 1,150 சுங்கச்சாவடிகளில் தடையற்ற பயணத்திற்காக கடந்த சுதந்திர தினத்தன்று வருடாந்திர பாஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அன்றே 1.40 லட்சம் வாகன ஓட்டிகள் அந்த பாஸை பெற்றனர். இதனைத் தொடர்ந்து அந்தத் திட்டம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்போது, பாஸ்டேக் இல்லாத வாகனங்கள் நவம்பர் 15 முதல் கூடுதல் கட்டணத்துடன் சுங்கம் செலுத்த வேண்டியுள்ளது.

  • பாஸ்டேக் வைத்திருப்போர்: ரூ.100
  • ரொக்கம் செலுத்துபவர்கள்: ரூ.200
  • யுபிஐ பயன்படுத்துபவர்கள்: ரூ.125 (1.25 மடங்கு)

இந்த மாற்றம் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவித்து, சுங்க வசூல் முறையில் வெளிப்படைத்தன்மை கொண்டு வரவும், பயண நேரத்தை குறைக்கவும் நோக்கமாகக் கொண்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Facebook Comments Box