இந்தியாவுடன் ஐரோப்பிய யூனியன் இன்று வர்த்தக பேச்சுவார்த்தை

இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (EFTA) தொடர்பான பேச்சுவார்த்தை இன்று பெல்ஜியத்தின் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் தொடங்குகிறது. இதில் இந்தியாவின் மூத்த அதிகாரிகள் மற்றும் ஐரோப்பிய யூனியனின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இது இருதரப்பில் நடைபெறும் 14-வது கட்ட பேச்சுவார்த்தையாகும். அக்டோபர் 6-ம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெறவுள்ளது.

மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் செயல்படுத்தும் வகையில் இருதரப்பும் ஆகக்காப்பு பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறது என்றும், விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் கூறியுள்ளார்.

ஐரோப்பிய வர்த்தக ஆணையர் மரோஸ் செப்கோவிகை தென்ஆப்பிரிக்கா செல்லும்போது பியூஷ் கோயல் இருதரப்புப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றங்கள் குறித்து விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2024–25-ல் இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையிலான இருதரப்பு சரக்கு வர்த்தகம் 136.53 பில்லியன் டாலர் (ஏற்றுமதி 75.85 பில்லியன் டாலர், இறக்குமதி 60.68 பில்லியன் டாலர்) இருந்தது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் ஐரோப்பிய யூனியன் பங்கு 17%, மொத்த இறக்குமதியில் பங்கு 9% ஆகும். 2023-ல் இருதரப்பில் சேவைகள் ஏற்றுமதி 51.45 பில்லியன் டாலர் எனும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Facebook Comments Box