இந்திய பொருளாதாரம் எதையும் தாங்கும்; ஜிடிபி வளர்ச்சி 8% உயரும்: நிர்மலா சீதாராமன்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்திய பொருளாதாரம் எந்த மாற்றத்தையும் எதிர்கொள்ளும் திறன் பெற்றதாகவும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8 சதவீத வளர்ச்சி அடைய இலக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற கவுடில்யா பொருளாதார மாநாட்டில் பேசிய அவர்: “உலகளாவிய பிரச்சினைகள் தீவிரம் அடைந்துள்ளன. வரி விதிப்புகள், தடைகள், பிரிக்கும் யுக்திகள் அனைத்தும் உலகளாவிய நுகர்வு சங்கிலியை மாற்றுகின்றன. இந்த மாற்றங்கள் இந்தியாவின் பலவீனம் மற்றும் வலிமையை வெளிப்படுத்துகின்றன. மாற்றங்கள் மற்றும் அதிர்வுகளை தாங்கும் திறனை வரவேற்கிறோம். 2047-க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறுவது, இந்தியா மூடப்பட்ட பொருளாதாரமாக இருப்பதை பொருள் படுத்தாது.

வளர்ந்த நாடு என்ற இலக்கை அடைய, மொத்த உள்நாட்டு உற்பத்தியை 8% உயர்த்த வேண்டும். உள்நாட்டு வர்த்தக நிலை வலுவாக உள்ளது. இது உலகளாவிய வர்த்தக நிச்சயமற்றதனால் ஏற்படும் பாதிப்பை குறைக்கும். இந்தியாவின் பொருளாதாரம் எதையும் தாங்கும் திறன் பெற்றுள்ளது. அது தொடர்ந்தும் நிலையாக வளரும். உலகளாவிய வர்த்தக சூழல், நிலையான மற்றும் எதிர்பாராத ஒத்துழைப்புகளை உருவாக்கும். நமது விதியை தீர்மானிக்கும் முடிவுகள் உலகில் எங்கோ எடுக்கப்படும் போது, நாம் வெறும் பார்வையாளர்கள் அல்ல, தீவிர பங்காற்றி மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

Facebook Comments Box