தங்க விலை பவுனுக்கு ரூ.120 உயர்வு; வெள்ளி விலையும் உயர்வு

தங்கம் விலை இன்று (அக்.9) பவுனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது.

சர்வதேச பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப தங்கம் விலையில் ஏற்றத்துக்கும், இறக்கத்துக்கும் இடையே மாற்றங்கள் நடக்கின்றன. இதன்படி, செப்.6-ம் தேதி ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.80,040-க்கு விற்கப்பட்டிருந்தது; செப்.23-ம் தேதி அது ரூ.85,120 ஆக உயர்ந்தது.

எச்1பி விசா கட்டணத்தை அமெரிக்க அரசு உயர்த்தியது. அமெரிக்க டாலருடன் ஒப்பிடும்போது இந்திய ரூபாயின் மதிப்பு குறைவு ஆகியவை தங்க விலை உயர்வுக்கு முக்கிய காரணங்கள். அமெரிக்கா வட்டி விகிதங்களை குறைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனால் தங்க முதலீடுகள் அதிகரித்து, விலை ஏற காரணமாக இருக்கிறது.

இதன்பின், சில நாட்கள் விலை இறங்கவும், பெரும்பாலான நாட்கள் உயரவும் இருந்த நிலையில், அக்.6 பவுன் தங்கம் ரூ.89,000-ஐ தொட்டது. தொடர்ந்து, அக்.7 அன்று பவுன் ரூ.600 உயர்ந்து, ரூ.89,600-க்கு விற்கப்பட்டது.

நேற்று (அக்.8) ஒரு நாளில் காலையில் பவுனுக்கு ரூ.800, மாலையில் ரூ.680 உயர்ந்து, ஒரே நாளில் பவுன் ரூ.1,480 உயர்வு பெற்று, பவுன் ரூ.91,080 ஆக விற்கப்பட்டது.

இந்நிலையில் இன்று (அக்.9) 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,400-க்கும், பவுனுக்கு ரூ.120 உயர்ந்து பவுன் ரூ.91,200-க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் 171 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,71,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Facebook Comments Box