மெட்டாவின் சூப்பர் இன்டலிஜென்ஸ் திட்டத்தை வழிநடத்த அலெக்ஸாண்டர் வாங் யாரென்று பார்க்கலாம்.

மெட்டா நிறுவனத்தின் ஏஐ பிரிவுக்கான தலைவராக திறமையான அலெக்ஸாண்டர் வாங் தற்போது நியமிக்கப்பட்டார்.

அலெக்ஸாண்டர், 2016-ல் 19 வயதில் தனது தொழில்துறையில் பயணத்தைத் தொடங்கினார். அப்போது அவர் தனது தோழி லூசி குவாவுடன் சேர்ந்து ஸ்கேல் ஏஐ எனும் ஸ்டார்ட்அப் நிறுவனத்தை நிறுவினார். தங்கள் கனவை நிறைவேற்ற கடுமையாக உழைத்தனர், இதனால் குறுகிய காலத்தில் ஸ்கேல் ஏஐ தொழில்நுட்ப உலகின் கவனத்தை ஈர்த்தது.

அலெக்ஸாண்டர் வாங்-இன் திறமையைப் பார்த்து மார்க் ஸுகர்பெர்க் உடனே அவரை தேர்ந்தெடுத்து மெட்டாவின் ஏஐ செயல்பாடுகளுக்கான தலைவராக அறிவித்தார். அதோடு, வாங்கின் ஸ்டார்ட்அப்பில் 14.3 பில்லியன் டாலர் முதலீட்டும் செய்தார், இந்திய மதிப்பில் ரூ.1.24 லட்சம் கோடி.

இப்பொழுது வாங் மெட்டாவின் நிபுணர்கள் குழுவுக்கு தலைமை வகிக்கிறார். மேலும் மெட்டா சூப்பர் இன்டலிஜென்ஸ் லேப்ஸ் கீழ், மெட்டாவின் மற்ற ஏஐ மற்றும் ஆராய்ச்சி குழுக்களும் அவரது மேற்பார்வையில் இயங்குகின்றன.

பணியில் நியமிக்கப்பட்ட சில காலத்திற்குள், வாங் மெட்டா ஏஐ குழுவை 4 தனித்தனி குழுக்களாகப் பிரித்து மறுசீரமைத்தார்.

1997-ல், சீனாவிலிருந்து நியூ மெக்சிகோவுக்கு குடியேறிய இயற்பியல் வல்லுநர் தம்பதியின் மகனாக பிறந்தவர். எம்.ஐ.டி. படிப்பை பாதியில் நிறுத்தி ஸ்கேல் நிறுவனம் தொடங்கியவர். 20 வயதில் பில்லியனர் ஆனவர். ஓபன் ஏஐ சாம் ஆல்ட்மேன் உட்பட சிலிக்கான் வேலி முக்கிய பிரமுகர்களுடன் வலுவான தொடர்பும் கொண்டவர்.

மெட்டா ஏஐ தலைமை அதிகாரியாக பொறுப்பேற்றவுடன், நிறுவனம் நீண்டகாலத் திட்டங்களை நோக்கி செயல்பட கூர்மையான கவனம் தேவைப்படுவதாக வாங் தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box