தங்கம், வெள்ளி விலை புதிய உச்சத்தில்: ஒரு பவுன் ரூ.91,400

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.11) புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதேபோல், வெள்ளி விலையும் வரலாறில் முன்பு இல்லாத உயரத்தை சந்தித்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு பின்புல காரணங்களை பார்க்கலாம்.

தங்க விலை சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் அமெரிக்க டாலருக்கு ஒப்பான இந்திய ரூபாய் மதிப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50% வரி விதிப்பு, டாலருக்கு ஒப்பான இந்திய ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சி, உக்ரைன்–ரஷ்யா போர், இஸ்ரேல்–ஹமாஸ் மோதல் போன்ற காரணங்கள் தங்க விலையை அதிரடியாக உயர வைத்துள்ளன.

சென்னையில் 22 காரட் தங்கம் இன்று கிராம் ஒன்றுக்கு ரூ.85 உயர்ந்து, ரூ.11,425 விலையில் விற்பனை ஆகிறது. ஒரு பவுன் தங்கம் ரூ.680 உயர்ந்து, ரூ.91,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 24 காரட் தங்கம் ரூ.99,712, 18 காரட் தங்கம் ரூ.75,600 விலையில் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை: சென்னையில் இன்று வெள்ளி விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு ரூ.3 உயர்ந்து, ரூ.187க்கு விற்பனை ஆகிறது. கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.3,000 உயர்ந்து, ரூ.1,87,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விலை உயர்வு காரணம்: தங்கத்திற்குப் பிறகு வெள்ளியில் முதலீடு செய்யும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதோடு, தொழில் துறையிலும் வெள்ளியின் தேவை அதிகரித்ததால், வெள்ளியின் விலையும் புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

Facebook Comments Box