மாலை நேரத்தில் மீண்டும் உயர்ந்தது தங்க விலை — பவுனுக்கு ரூ.92,000 என்ற புதிய சாதனை!

இன்று (அக்டோபர் 11) காலை ஏற்கனவே ரூ.680 உயர்ந்திருந்த தங்க விலை, மாலை நேரத்தில் மேலும் ரூ.600 உயர்ந்து, பவுனுக்கு ரூ.92,000 என்ற வரலாறு காணாத உச்ச விலையை எட்டியுள்ளது.

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ச்சியான ஏற்றத்தைக் காண்கிறது. அமெரிக்கா இறக்குமதி வரி உயர்வு (50%), டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பில் சரிவு, மேலும் உக்ரைன்–ரஷ்யா போர் மற்றும் இஸ்ரேல்–ஹமாஸ் மோதல் ஆகியவை தங்க விலையை மேலும் தூண்டி விட்டன.

இன்று காலை சென்னை சந்தையில் 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.11,425 ஆகவும், பவுனுக்கு ரூ.91,400 ஆகவும் இருந்தது. மாலை நேரத்தில் அது ரூ.600 உயர்ந்து, பவுனுக்கு ரூ.92,000 என விற்பனை செய்யப்படுகிறது. இதனால், ஒரே நாளில் தங்க விலை ரூ.1,280 உயர்வு கண்டுள்ளது.

இதேபோல், 24 காரட் தங்கம் ரூ.99,712-க்கும், 18 காரட் தங்கம் ரூ.75,600-க்கும் விற்கப்படுகிறது.

தங்கத்துடன் சேர்த்து வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.6 உயர்ந்து ரூ.190, கிலோவுக்கு ரூ.6,000 உயர்ந்து ரூ.1.90 லட்சம் என புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

நிபுணர்கள் தெரிவிப்பதாவது — “புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் ரூபாய் மதிப்பில் வீழ்ச்சி (₹88.72 / டாலர்) ஆகியவை தங்க, வெள்ளி விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளன” என கூறினர்.

Facebook Comments Box