கீர்த்தி சுரேஷின் ‘ரிவால்வர் ரீட்டா’ ஆக.27-ல் ரீலிஸ்!

கீர்த்தி சுரேஷின் ‘ரிவால்வர் ரீட்டா’ ஆகஸ்ட் 27ம் தேதி திரையரங்குகளில் வெளிவரவுள்ளது

நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘ரிவால்வர் ரீட்டா’ ஆகஸ்ட் 27ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம், ஜே.கே சந்துரு இயக்கத்தில் உருவாகி இருக்கிறது. இதில் ராதிகா சரத்குமார், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சூப்பர் சுப்பராயன், அஜய் கோஷ், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் தினேஷ் கிருஷ்ணன் மற்றும் இசையமைப்பாளராக ஷான் ரோல்டன் பணியாற்றியுள்ளார். படம் முழுவதும் நகைச்சுவை மற்றும் திரில்லர் வகைச் சுருக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்த நிலையில், ஒரு சிறந்த வெளியீட்டு தேதிக்காக காத்திருந்தது படக்குழு. தற்போது விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, ஆகஸ்ட் 27ம் தேதி வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது படக்குழு, விரைவில் பாடல்கள் மற்றும் ட்ரெய்லரை வெளியிட்டு, பிரம்மாண்டமான விளம்பரச் செயல்பாடுகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.

Facebook Comments Box