பேட் கேர்ள்’ டீசரை அகற்ற உத்தரவு – உயர் நீதிமன்றம் பரிந்துரை

Daily Publish Whatsapp Channel

‘பேட் கேர்ள்’ டீசரை அகற்ற உத்தரவு – உயர் நீதிமன்றம் பரிந்துரை

பதின்ம வயதுடைய சிறார்களை தவறான வகையில் காண்பிக்கும் ‘பேட் கேர்ள்’ திரைப்படத்தின் டீசரை சமூக ஊடகத்திலிருந்து நீக்கும்படி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் ராம்குமார் ஆகியோர் தாக்கல் செய்திருந்த வழக்கில் தெரிவிக்கப்பட்டிருந்தது:

2025 ஜனவரி 26-ம் தேதி ‘பேட் கேர்ள்’ என்ற படத்தின் டீசர் யூடியூப் உள்ளிட்ட இணைய தளங்களில் வெளியிடப்பட்டது. இதில், பதின்ம வயதினரை தவறாக சித்தரிக்கும் பல காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இவை குழந்தைகளுக்கான ஆபாசம், பாலியல் வன்முறைகள் போன்ற சட்ட விரோத செயல்களில் அடங்கும். எனவே, இப்படியான வீடியோக்கள் இணையதளங்களில் இருந்து அகற்றப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த வழக்கில் நீதிபதி தனபால் நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில் அவர் கூறியதாவது:

பேட் கேர்ள் டீசரில் சிறுவர், சிறுமிகளை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. எனவே, அவை சமூக ஊடகங்களில் இருந்து அகற்றப்படும் வகையில், உத்தரவு பெற்றது முதல் ஒரு மாதத்திற்குள் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற ஆபாச மற்றும் தவறான உள்ளடக்கங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படாத வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதனுடன் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மனுதாரர்கள் நேரடியாகத் தகுந்த அலுவலரிடம் புகார் அளித்து சட்டப்பூர்வ நிவாரணம் பெறலாம் எனவும் நீதிபதி தெரிவித்தார்.

Facebook Comments Box