மார்க்ரம் சதம், பவுமா அரை சதம் – வெற்றியை நெருங்கும் தென் ஆப்பிரிக்கா

0

லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணிக்கு 282 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்தது.

முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 212 ரன்கள் எடுத்தது. இதில் பியூ வெப்ஸ்டர் 72 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 66 ரன்களும் அடித்து முக்கிய பங்களிப்பு செய்தனர். தென் ஆப்பிரிக்க பந்து வீச்சில் காகிசோ ரபாடா 5 விக்கெட்களையும், மார்கோ யான்சன் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

பின்னர் தென் ஆப்பிரிக்க அணி 57.1 ஓவர்களில் 138 ரன்களுக்கு_ALL_OUT_ஆகியது. டேவிட் பெடிங்ஹாம் 45, கேப்டன் தெம்பா பவுமா 36 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலிய பந்துவீச்சில் பாட் கம்மின்ஸ் 6 விக்கெட்களையும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

74 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, 40 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழந்து 144 ரன்கள் எடுத்தது. மிட்செல் ஸ்டார்க் 16, நேதன் லயன் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மூன்றாவது நாளில் நேதன் லயன் வெறும் 2 ரன்களில் ரபாடா பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.

பின்னர் ஜோஷ் ஹேசில்வுட் களமிறங்கி மிட்செல் ஸ்டார்க்குடன் இணைந்து சகிப்புத்தன்மையுடன் விளையாடி ரன்கள் சேர்த்தார். ஸ்டார்க் 131 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் எடுத்தார் — இது அவரது 11வது அரைசதமாகும்.

இவர்கள் கடைசி விக்கெட்டுக்கு 135 பந்துகளில் 59 ரன்கள் சேர்த்தனர். இந்த கூட்டணியை எய்டன் மார்க்ரம் முறித்து வைத்தார். ஹேசில்வுட் 53 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் எடுத்தார். இவர் மார்க்ரம் பந்தை கவர் திசையில் அடித்தபோது மகாராஜ் கேட்ச் பிடித்தார்.

ஆஸ்திரேலிய அணி 65 ஓவர்களில் 207 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. ஸ்டார்க் ஆட்டமிழையாமல் 58 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்க பந்து வீச்சில் ரபாடா 4, லுங்கி நிகிடி 3 விக்கெட்களையும், மற்ற வீரர்கள் தலா ஒரு விக்கெட்களையும் வீழ்த்தினர்.

282 ரன்கள் இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை தென் ஆப்பிரிக்கா தொடங்கியது. தொடக்க வீரர் ரியான் ரிக்கெல்டன் 6 ரன்களில் ஸ்டார்க் பந்தில் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் பிடிபட்டார்.

பின்னர் வந்த வியான் முல்டர், எய்டன் மார்க்ரமுடன் கூட்டணி அமைக்க முயன்றார். முல்டர் 50 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் எடுத்தபோது ஸ்டார்க்கின் பந்தில் லபுஷேனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 2-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 61 ரன்கள் சேர்த்தது.

56 ஓவர்களுக்கு பின்னர் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட்கள் இழந்த நிலையில் 213 ரன்கள் எடுத்தது. மார்க்ரம் 102, பவுமா 65 ரன்களுடன் ஆட்டத்தில் நீடித்தனர்.

தென் ஆப்பிரிக்கா வெற்றிக்கு மேலும் 69 ரன்கள் மட்டுமே தேவை. அவர்களிடம் இன்னும் 8 விக்கெட்கள் கைகூடிய நிலையில் உள்ளன. மார்க்ரம் – பவுமா ஜோடி 143 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here