2026 ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியீடு!

0

2026 ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியீடு!

மகளிர் ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது 2026ஆம் ஆண்டு ஜூன் 12 முதல் ஜூலை 5 வரை இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரின் முழுமையான அட்டவணையை ஐசிசி மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இணைந்து நேற்று அறிவித்தன.

இந்த முறை 12 அணிகள் போட்டியில் பங்கேற்று, சாம்பியன் பட்டத்திற்காக மோதவுள்ளன. 24 நாட்கள் நீடிக்கும் இத்தொடரில் மொத்தம் 33 போட்டிகள் நடைபெறவுள்ளன. இங்கிலாந்தின் ஏழு மைதானங்கள் இந்த போட்டிகளுக்காக தேர்வுசெய்யப்பட்டுள்ளன.

பங்கேற்கும் 12 அணிகள் இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

குழு 1ல்:

  • ஆறு முறை சாம்பியனாக வெற்றிபெற்ற ஆஸ்திரேலியா
  • கடந்த தொடரில் இரண்டாவது இடம் பெற்ற தென் ஆப்பிரிக்கா
  • இந்தியா
  • பாகிஸ்தான்
  • இரு தகுதிச் சுற்று அணிகள்

குழு 2ல்:

  • தற்போதைய சாம்பியன் நியூசிலாந்து
  • மேற்கு இந்திய தீவுகள்
  • இலங்கை
  • இங்கிலாந்து
  • இரு தகுதிச் சுற்று அணிகள்

லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரு அணிகள் அரையிறுதி சுற்றுக்குத் தகுதி பெறும்.

அரையிறுதிப் போட்டிகள் ஜூன் 30 மற்றும் ஜூலை 2 ஆகிய தேதிகளில் ‘தி ஓவல்’ மைதானத்தில் நடைபெறும். இறுதி ஆட்டம் ஜூலை 5ஆம் தேதி பிரபலமான லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தை ஜூன் 14-ஆம் தேதி பாகிஸ்தானுடன் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் ஆடுகிறது. மற்ற போட்டிகள் நடைபெறும் மைதானங்கள்: ஹாம்ப்ஷயர் பவுல், ஹெடிங்லி, ஓல்ட் டிராஃபோர்டு, தி ஓவல், பிரிஸ்டல் கவுண்டி மைதானம் மற்றும் லார்ட்ஸ் ஆகியவையாகும்.

இந்திய அணியின் மற்ற லீக் ஆட்டங்கள்:

  • ஜூன் 17 – தகுதி சுற்று அணி
  • ஜூன் 21 – தென் ஆப்பிரிக்கா
  • ஜூன் 25 – தகுதி சுற்று அணி
  • ஜூன் 28 – ஆஸ்திரேலியா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here