மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட், இன்னிங்ஸ் வெற்றிக்கான பாதையில் இங்கிலாந்து

0

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி, தனது முதல் இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி முதல் நாளில் 121 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 371 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் 6 பேர் அரை சதம் அடித்து அசத்தினர்.

250 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஒருவர் பின் ஒருவராக ஆட்டமிழந்தனர். 2வது நாள் முடிவில் அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து 79 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. ஜோசுவா டி சில்வா 8 ரன்களுடன் களத்தில் உள்ளார். இங்கிலாந்து தரப்பில் ஸ்டோக்ஸ், ஆண்டர்சன், அட்கின்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

வெஸ்ட் இண்டீஸ் இன்னும் 171 ரன்கள் பின்தங்கியுள்ளது. கைவசம் 4 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளதால், இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளது. இத்தகைய சூழலில் இன்று 3வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here