திருமணம் செய்து கொண்டீர்களா என்று ரசிகர் கேட்ட கேள்விக்கு ஸ்ருதிஹாசன் பதிலளித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் நடிப்பில் சமீபத்தில் தெலுங்கில் வெளியான ‘கிராக் எனும்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமூகவலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஸ்ருதிஹாசன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடியுள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் திருமணம் செய்து கொண்டீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த ஸ்ருதிஹாசன் இல்லை என்று கூறியுள்ளார்.
Facebook Comments Box