‘பென்ஸ்’ திரைப்படத்தில் எதிர்மறை கதாப்பாத்திரத்தில் நிவின் பாலி நடிக்கிறார் என்கிற தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகும் ‘பென்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் வில்லன் வேடத்தில் யார் நடிக்கிறார் என்பதை இதுவரை ரகசியமாக வைத்திருந்த படக்குழு, தற்போது வெளியிடப்பட்ட க்ளிம்ஸ் வீடியோ மூலம் நிவின் பாலி அந்தப் பாத்திரத்தில் நடித்துவருகிறார் என அறிவித்துள்ளது. இந்த படத்தில் அவர் ‘வால்டர்’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் உருவாக்கியுள்ள யுனிவர்ஸ் படத் தொடர்களில் ‘பென்ஸ்’ திரைப்படமும் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் ராகவா லாரன்ஸ் முன்னணி நடிகராக நடிக்கிறார். பேஷன் ஸ்டூடியோஸ், தி ரூட் மற்றும் ஜி ஸ்கோட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படம் தற்போது சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனமும், இசை உரிமையை திங்க் மியூசிக் நிறுவனமும் பெற்றுள்ளன. எனவே, படப்பிடிப்பை விரைவில் முடித்து, வெளியீட்டிற்கு தயாராக படக்குழு திட்டமிட்டுள்ளது.

Facebook Comments Box