‘கைதி 2’ படத்தில் அனுஷ்கா நடிப்பது குறித்து வெளியாகிய செய்தி வெறும் வதந்தி என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் தற்போது ‘கூலி’ திரைப்படத்தின் இறுதி வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்தப் படத்துக்குப் பிறகு, அவர் நடிப்பதில் கவனம் செலுத்த உள்ளார். அதனுக்குப் பிறகு தான் ‘கைதி 2’ படத்தை இயக்கும் திட்டம் வைத்துள்ளார். இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மற்றும் கே.வி.என் நிறுவனம் சேர்ந்து தயாரிக்கவுள்ளது. இருப்பினும், இந்தப் படத்தின் எந்தவொரு பணி கூட இன்னும் துவங்கப்படவில்லை.
இந்நிலையில், ‘கைதி 2’ திரைப்படத்தில் அனுஷ்கா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்த தகவல் பல சமூக ஊடகங்களில் பரவி வைரலாகியுள்ளது. ஆனால் உண்மையில், படம் தொடங்காத நிலையில் அனுஷ்காவின் நடிப்பு எப்படி உறுதி செய்யப்பட்டது என்பது கேள்விக்குறியாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே இது உண்மையல்ல என்றும் தெரியவந்துள்ளது.
இதே நேரத்தில், லோகேஷ் கனகராஜ் தற்போது தாய்லாந்தில் தங்கி தற்காப்புக் கலைகளை கற்றுக்கொண்டு வருகிறார். மேலும், ‘கூலி’ படத்தின் இறுதிகட்ட பணிகளையும் நேரில் பார்வையிட்டு வருகின்றார்.