மலையாள திரைப்படத் துறையில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மோகன்லால். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். அவரது மகன் பிரணவ் மோகன்லால் மலையாள சினிமாவில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இதற்கிடையில், மோகன்லாலின் மகள் விஸ்வமயா திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். ‘2018’ என்ற மெகா ஹிட் திரைப்படத்தை இயக்கிய ஜூட் ஆண்டனி, தனது அடுத்த படமான ‘துடக்கம்’-இல் விஸ்வமயாவை நாயகியாக அறிமுகம் செய்கிறார். இந்தப் படத்தை ஆசீர்வாத் சினிமாஸ் நிறுவனம் சார்பில் அந்தோணி பெரும்பாவூர் தயாரிக்கிறார்.
சினிமா உலகிற்கு தனது சகோதரி முதற்கட்ட படியை எடுத்து வைக்கிறார் எனக் கூறிய பிரணவ் மோகன்லால், “இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது” என தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
Facebook Comments Box