அனுஷ்கா நடித்துள்ள ‘காத்தி’ திரைப்படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டது
‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி’ படத்திற்கு பிறகு அனுஷ்கா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘காத்தி’. படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆரம்பத்தில் இந்த படம் ஏப்ரல் 18ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அது மாற்றப்பட்டு, ஜூன் 11ஆம் தேதி என புதிய வெளியீட்டு தேதியாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், எந்தவிதமான விளம்பர நடவடிக்கைகளும் தொடங்கப்படாததால், படம் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதற்கான முக்கிய காரணமாக, படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் இன்னும் முழுமையடையாதது குறிப்பிடப்படுகிறது. புதிய வெளியீட்டு தேதி மற்றும் பிற விவரங்களை விரைவில் படக்குழு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிரிஷ் ஜாகர்லமுடியின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அனுஷ்காவுடன் விக்ரம் பிரபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார் நாகவல்லி வித்யாசாகர். சமீபத்தில் வெளியான க்ளிம்ஸ் வீடியோவிலேயே அனுஷ்காவின் ஆக்ஷன் கதாபாத்திரம் பேசுபொருளானது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் ‘காத்தி’ திரைக்குவரும் என கூறப்பட்டுள்ளது.