“உலகளவில் மிக சிறந்த மகாகாவியமாக ராமாயணத்தை உருவாக்குவதே எங்கள் இலக்கு” – தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ராமாயணம் திரைப்படத்தை இந்திப் பட இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கி வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த பிரம்மாண்ட திரைப்படத்தில், ரன்வீர் கபூர் ராமரின் பாத்திரத்தில் நடிக்க, சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும் நடிக்கின்றனர். ராவணனின் மனைவி மண்டோதரியாக நடிகை காஜல் அகர்வால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் வெளியாக இருக்கிறது.

மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோட், தி சூசைட் ஸ்குவாட் போன்ற பல ஹாலிவுட் படங்களில் வேலை பார்த்துள்ள ஸ்டண்ட் நிபுணர் கய்நோரிஸ், இந்த படத்தின் சண்டைக் காட்சிகளை வடிவமைக்கிறார்.

இந்தப் படத்தின் முதல் பாகம் 2026 ஆம் ஆண்டின் தீபாவளிக்கு, இரண்டாவது பாகம் 2027 தீபாவளிக்கு வெளியிடப்படும் என திட்டமிடப்பட்டுள்ளது.

தயாரிப்பு நிறுவனமான பிரைம் போக்ஸின் நமித் மல்ஹோத்ரா, “இரண்டு பாகங்களையும் தயாரிக்க மொத்தம் 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது சுமார் ₹4,000 கோடிக்கு மேல் செலவாகும். இது ஒரு மகாகாவிய படைப்பு என்பதால் ஒவ்வொரு அம்சத்திற்கும் மிகுந்த நேரம் மற்றும் மூலதனம் ஒதுக்கப்பட்டுள்ளோம். ஹாலிவுட் திரைப்படங்களின் அளவிலும் இது பெரியதாகவே அமைகிறது.

உலகமே பார்த்து ரசிக்கும் வகையில் இந்த மகாகாவியத்தை உருவாக்குவதே எங்கள் முக்கியக் குறிக்கோள்” என்று கூறினார்.

Facebook Comments Box