ஹாலிவுட்டில் புதிய பயணத்தைத் தொடக்கின்றார் வித்யுத் ஜம்வால்!

பாலிவுட் திரையுலகில் தனது அதிரடி நடிப்புக்காக அறியப்படும் வித்யுத் ஜம்வால், தமிழ் சினிமாவிலும் துப்பாக்கி, அஞ்சான் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர். தற்போது, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் மதராஸி படத்திலும் அவர் ஒரு முக்கிய வேடத்தில் பங்கேற்று நடித்து வருகிறார்.

இந்தநிலையில், வித்யுத் ஜம்வால் தனது திரைப்பயணத்தை ஹாலிவுட் பக்கம் விரிவாக்கியுள்ளார். அவர், ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ எனும் பிரபலமான வீடியோ கேம் தொடரை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் ஹாலிவுட் ஆக்‌ஷன் திரைப்படத்தில், தால்சிம் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் புதிய படத்தில், ஆண்ட்ரு கோஜி, நோவா சென்டினியோ, மற்றும் ஜேசன் மோமோவா போன்ற உலகத் திரைப்பட நட்சத்திரங்களும் சேர்ந்து பணியாற்றுகின்றனர். உலகளவில் பிரபலமான கேப்காம் நிறுவனத்தின் வீடியோ கேம் சார்ந்த இந்தத் திரைப்படம், ஹாலிவுட்டிலும் இந்திய நட்சத்திரங்களை அறிமுகப்படுத்தும் வகையில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

Facebook Comments Box