“பெரும் அவமானம்” – ‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு தேசிய விருது வழங்கியதை கடுமையாக விமர்சித்த பினராயி விஜயன்

“பெரும் அவமானம்” – ‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு தேசிய விருது வழங்கியதை கடுமையாக விமர்சித்த பினராயி விஜயன்

71-வது தேசிய திரைப்பட விருதுகளில், ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை இயக்கிய சுதிப்தோ சென்னு சிறந்த இயக்குநருக்கான விருதை வென்றிருப்பதை குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்த விருதுகள் கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) அறிவிக்கப்பட்டன. சிறந்த திரைப்படமாக ‘12த் ஃபெயில்’, சிறந்த தமிழ் திரைப்படமாக ‘பார்க்கிங்’ தேர்வாகி, அதில் நடித்த எம்.எஸ். பாஸ்கர் சிறந்த துணை நடிகராகவும், அதே படத்துக்கு சிறந்த திரைக்கதைக்கான விருதும் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சிறந்த இயக்குநருக்கான விருதை ‘தி கேரளா ஸ்டோரி’ பட இயக்குநர் சுதிப்தோ சென்னு வென்றுள்ளார்.

இந்த பரிசளிப்பு குறித்து தனது X (முன்னர் ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் பினராயி விஜயன் கூறியிருப்பதாவது:

“கேரளாவின் பெயரை மாசுபடுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட, தவறான தகவல்களை பரப்பும் வகுப்புவாதத்தையும் வெறுப்பையும் தூண்டும் கதையை அடிப்படையாகக் கொண்ட ஒரு படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டிருப்பது தீவிர சங்கh அணியின் பிளவுப்படுத்தும் அரசியல் சிந்தனைகளுக்கு நீதிபரிசாக அங்கீகாரம் அளித்தது போன்றதாகும்.

இது போலவே, சகஜ ஒற்றுமையை பின்பற்றும் கேரளாவின் அடையாளத்தைப் பாதிக்கும் வகையில் ஒரு விருது வழங்கப்படுவது மிகப்பெரும் அவமானமாகும்.

மலையாளிகள் மட்டுமன்றி, ஜனநாயக மதிப்புகளில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரும், இந்திய அரசியலமைப்பின் அடிப்படைகளைக் காக்க தங்களது எதிர்வினையை பதிவு செய்ய வேண்டிய நேரமிது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

படம் வெளியானபோது, அது இஸ்லாமிய மதத்தினருக்கெதிரான தவறான தகவல்களை பரப்புவதாகும் என்று பல்வேறு தரப்புகளில் விமர்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது. தற்போதைய விருது அறிவிப்பும் அதனைத் தொடர்ந்து புதிய அரசியல் விவாதங்களை உருவாக்கியுள்ளது.

Facebook Comments Box