எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் உருவாகும் ‘கிராண்ட் ஃபாதர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
பிரபல நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘கிராண்ட் ஃபாதர்’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளதுடன், இப்படத்தின் முதல் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியாகியுள்ளது.
சமீபத்தில் நடந்த 71-வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் ‘பார்க்கிங்’ திரைப்படத்தில் நடித்ததற்காக எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகர் விருது வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திரை உலகைச் சேர்ந்த பலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தேசிய விருதைப் பெற்றுள்ள எம்.எஸ்.பாஸ்கர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ‘கிராண்ட் ஃபாதர்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ப்ராங்க் ஸ்டார் ராகுல் இயக்கும் இப்படத்தில், எம்.எஸ்.பாஸ்கர் தாத்தாவாகவும், அவருடைய பேரனாக ப்ராங்க் ஸ்டார் ராகுல் நடித்தும் இருக்கிறார். ‘குட்டி ஸ்டோரிஸ் பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இப்படம், ப்ராங்க் ஸ்டார் ராகுலுக்கு இயக்குநராகும் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாஸ்கர், ப்ராங்க் ஸ்டார் ராகுல் ஆகியோர்களுடன் ஸ்மீகா, அருள் தாஸ், முனீஸ்காந்த், ஸ்ரீநாத், சிவா அரவிந்த், பிரியதர்ஷினி, அஞ்சலி ராவ், அபிநயா உள்ளிட்ட பலரும் நடித்துவருகின்றனர். இப்படத்திற்கு ஒளிப்பதிவை ஸ்ரீதர் மேற்கொண்டு வருகிறார். இசை அமைப்பை ரஞ்சின் ராஜ் கவனிக்கிறார். படத்தொகுப்புப் பணியில் திவாகர் பங்களிக்க, கலை இயக்கத்தை பிரேம் செய்கிறார்.
நகைச்சுவையும், அதிசய அம்சங்களும் இணைந்த ஹாரர் ஃபேண்டஸி வகை படமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தை புவனேஷ் சின்னசாமி தயாரிக்கிறார். மெட்ரோ முரளி மற்றும் மெட்ரோ கிரி இணைத் தயாரிப்பாளர்களாக பணியாற்றுகின்றனர். தற்போது படத்தின் ஷூட்டிங் வேலைகள் முழு வேகத்துடன் நடைபெற்று வருகிறது.