இணையத்தில் பரவும் ‘ஸ்பைடர் மேன்’ படப்பிடிப்பு படங்கள்!

டாம் ஹாலண்ட் நடிப்பில் உருவாகும் ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் தற்போது இணையத்தில் தீவிரமாக பரவி வருகின்றன.

சூப்பர் ஹீரோக்களைக் குறித்த ‘ஸ்பைடர் மேன்’ படங்களுக்கு உலகளவில் பெரும் ரசிகர்கள் வட்டம் உள்ள நிலையில், இதுவரை 8 படங்கள் வெளியானுள்ளன.

அதில், டாம் ஹாலண்ட் நடித்துள்ள ‘ஸ்பைடர் மேன்: ஹோம் கமிங்’, ‘ஃபார் ஃபிரம் ஹோம்’, ‘நோ வே ஹோம்’ ஆகிய மூன்று திரைப்படங்களும் பெரும் வரவேற்பைப் பெற்றன. இவை அனைத்துக்கும் அடுத்ததாக உருவாகும் நான்காவது பாகத்துக்கு ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இப்படத்தில் ஸ்பைடர் மேனின் முதல் தோற்றம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. ஸ்காட்லாந்தில் உள்ள க்ளாஸ்கோ நகரத்தில் தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், அங்கு உருவாக்கப்பட்ட மிகப்பெரிய செட்டில், ரசிகர்கள் எடுத்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் பரவிவருகின்றன.

இதில், நூற்றுக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் ஸ்பைடர் மேன் வேஷத்தில் டாம் ஹாலண்ட் ஒரு காரின் மீது நிற்கும் புகைப்படம், சமூக வலைதளங்களில் மிக விரைவாக பரவி வருகிறது.

இந்த படம் 2026 ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments Box