“மலையாள சினிமாவுக்கு செல்ல என்னை உறுதியாக பிரேரித்தவர் கமல்!” – நடிகை ஊர்வசி

மலையாள திரையுலகில் தன்னை செல்வாக்குடன் நடிக்க வைக்கச் சொன்னவர் நடிகர் கமல்ஹாசனே என நடிகை ஊர்வசி தெரிவித்துள்ளார்.

‘உள்ளொழுக்கு’ திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை ஊர்வசி பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட முறைகள், ஷாரூக்கானுக்கு விருது வழங்கப்படாமை உள்ளிட்ட விடயங்களைப் பற்றிய கேள்விகள் எழுப்பப்பட்டன.

இந்நிலையில், தமிழில் அவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டியில், கமல்ஹாசன் தான் தன்னை மலையாளத் திரைப்படங்களுக்கு திருப்பி வழிநடத்தியவர் என தெரிவித்துள்ளார். அந்த உரையாடலில் ஊர்வசி கூறியதாவது: “கமல் என்னுடைய மரியாதைக்குரிய நண்பர். சினிமா துறையில் இப்படிப்பட்ட நட்பு கிடைப்பது அரிது. திறமையைக் கவுரவிக்க தெரிந்தவர். ‘ஊர்வசி என்பது ஒருவிதமான அபூர்வமான திறமையின் கொண்ட நடிகை’ என்று அவர் பாராட்டிய பிறகுதான் தமிழ்த் திரையுலகில் நான் கவனிக்கபட்டேன். அது உண்மைத்தான்.

தமிழில் சில படங்களில் நடித்தவுடன், என்னை மலையாள சினிமாவுக்கு செல்வதற்காக ஊக்குவித்தது கமலின் அறிவுரையே. ‘உங்களுக்கு காதல் காட்சிகள், நெருக்கமான காட்சிகள் பிடிக்கவில்லை; நீங்கள் முழுமையாக நடிப்பில் கவனம் செலுத்துகிறீர்கள். உங்களுக்கு தமிழ்த் திரைமொழி ஏற்கும்படியாக இருக்காது. மலையாளத்துக்குச் செல்லுங்கள்; சிறந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கலாம்’ என்றார் கமல். அதற்குப் பிறகுதான் நான் மலையாளத் திரையில் தீவிரமாக நடிக்கத் தொடங்கினேன்,” என தெரிவித்தார் ஊர்வசி.

Facebook Comments Box