ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே டிக்கெட் முன்பதிவில் புதிய சாதனை படைத்து வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ரஜினி, சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், ஆமிர்கான் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு, அனிருத் இசையமைப்பு செய்துள்ளனர். ஆகஸ்ட் 14 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு ஆகஸ்ட் 8 அன்று துவங்கியது. சில மணி நேரங்களிலேயே சென்னை, கோவை போன்ற முக்கிய நகரங்களில் பெரும்பாலான திரையரங்குகளின் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. கேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகுந்த ஆர்வத்துடன் முன்பதிவு செய்யப்பட்டு, கவுன்டர்களிலும் பெரும் திரளான ரசிகர்கள் கூடினர்.
புள்ளிவிவரங்கள் படி,
- கேரளா: ஒரு மணி நேரத்தில் ரூ.1 கோடிக்கு மேல் டிக்கெட்டுகள் விற்பனை.
- புக்க்மைஷோ: ஒரே நாளில் 3,76,000 டிக்கெட்டுகள் விற்று சாதனை.
- கேரளா (மட்டுமே): ஒரு மணி நேரத்தில் 50,000 டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.
இந்திய அளவில், ‘எம்புரான்’ பிறகு அதிகளவு முன்பதிவு பெற்ற இரண்டாவது படம் என்ற பெருமையை ‘கூலி’ பெற்றுள்ளது.