₹150 கோடி வசூலை கடந்த ‘மகா அவதார் நரசிம்மா’ – இந்திய அனிமேஷன் படங்களுக்கு புதிய சாதனை
‘கே.ஜி.எஃப்’, ‘சலார்’, ‘காந்தாரா’ போன்ற பான்-இந்தியா ஹிட் படங்களை உருவாக்கிய ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில், அஸ்வின் குமார் இயக்கிய அனிமேஷன் படம் ‘மகா அவதார் நரசிம்மா’ ஜூலை 25 வெளியானது.
இரண்டு வாரங்களுக்குள், படம் உலகளவில் ₹150 கோடியைத் தாண்டிய வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. பொதுவாக இந்தியாவில் ஹாலிவுட் அனிமேஷன் படங்களே அதிக வரவேற்பைப் பெறும் நிலையில், உள்ளூர் தயாரிப்பான இந்த படம் வெற்றி பெறுவது சிறப்பாகக் கருதப்படுகிறது.
14வது நாளில் மட்டும் படம் ₹5 கோடி வசூல் செய்துள்ளது. இதில்:
- கன்னடம் – ₹15 லட்சம்
- தெலுங்கு – ₹1.03 கோடி
- இந்தி – ₹4.1 கோடி
- தமிழ் – ₹6 லட்சம்
- மலையாளம் – ₹1 லட்சம்
வசூல் வேகம் இதேபோல் நீண்டால், விரைவில் படம் ₹200 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Facebook Comments Box