“பிளாக் கோல்டு” — வெற்றி நடிக்கும் புதிய திரில்லர்!

வெற்றி, பிரியாலயா, லிவிங்ஸ்டன், துளசி, பிக்பாஸ் அபிராமி, ஏ.வெங்கடேஷ் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ள “பிளாக் கோல்டு” படத்தை தீரன் அருண்குமார் இயக்கியுள்ளார். எம்.எம் ஸ்டூடியோஸ் மூலம் எம்.மூர்த்தி வழங்கும் இந்த படத்தில் சந்தோஷ்குமார் வீராசாமி ஒளிப்பதிவை செய்து, கவாஸ்கர் அவினாஷ் இசை அமைத்துள்ளார்.

படக்குழுவின் தகவல்படி, நடுத்தர குடும்ப இளைஞன் மற்றும் பெரிய வணிக மாபியா ஆகியோருக்கு இடையேயான உண்மையான சம்பவங்களை மையமாகக் கொண்டு கதை உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

படத்தின் முதல் தோற்ற போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. சிறந்த திரில்லர் அனுபவம் தரும் இந்த படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எழுப்பி வைத்துள்ளது.

Facebook Comments Box