சபரிமலை பின்னணியில் ‘சன்னிதானம் பிஓ’!

சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் எதிர்கொள்ளும் எதிர்பாராத நிகழ்வுகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் ‘சன்னிதானம் பிஓ’. இதில் யோகிபாபு, கன்னட நடிகர் ரூபேஷ் ஷெட்டி, வர்ஷா விஸ்வநாத் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இவர்களுடன் சித்தாரா, பிரமோத் ஷெட்டி, மூணறு ரமேஷ், கஜராஜ், ராஜா ருத்ரகொடி, சாத்விக் வினோத் சாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை அமுதா சாரதி இயக்கியுள்ளார். சர்வதா சினி கேரேஜ், ரேஜ், ஷிமோகா கிரியேஷன்ஸ் சார்பில் மதுசூதன் ராவ், வி.விவேகானந்தன், ஷபீர் பதான் தயாரிப்பில் இருக்கின்றனர்.

படப்பிடிப்பு கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் சன்னிதானம், பம்பை, எருமேலி பகுதிகளோடு, சென்னை மற்றும் பொள்ளாச்சியிலும் நடைபெற்றுள்ளது. இந்த படத்தின் முதல் தோற்ற போஸ்டரை இயக்குநர் சேரன் மற்றும் நடிகை மஞ்சு வாரியர் வெளியிட்டுள்ளனர்.

Facebook Comments Box