“இந்த ஆண்டு எனக்கு பல பாடங்கள் கற்றுத் தந்தது” – நடிகை ஹன்சிகா
நடிகை ஹன்சிகா மோத்வானி, 2022 ஆம் ஆண்டு சோஹைல் கட்டாரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். முன்னதாகவே திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர் சோஹைல். திருமணத்திற்குப் பிறகு, சோஹைலின் வீட்டிலேயே தங்கியிருந்து வந்தார் ஹன்சிகா.
இந்நிலையில், கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் ஹன்சிகா மற்றும் அவரது கணவருக்கு இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக இருவரும் தற்போது தனித்தனியாக வாழ்ந்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்தன. பின்னர், தனது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கியது கூட கவனம் பெற்றது.
ஆகஸ்ட் 9 ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடிய ஹன்சிகா, இன்ஸ்டா ஸ்டோரியில், “இந்த ஆண்டு எனக்கு எண்ணற்ற பாடங்களை கற்றுத் தந்தது. எனக்குள்ளே மறைந்திருந்த வலிமையை வெளிக்கொணர்ந்தது. என் பிறந்த நாளில் தந்த அன்பான வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றி” என குறிப்பிட்டார். இந்த பதிவால், அவரின் விவாகரத்து விவகாரம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.