ஓடிடியில் ஆக.22-ம் தேதி ‘தலைவன் தலைவி’ ரிலீஸ்
அமேசான் ப்ரைம் தளத்தில் ‘தலைவன் தலைவி’ படம் ஆகஸ்ட் 22-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘தலைவன் தலைவி’ படம் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழகத்தில் மொத்த வசூலில் ரூ.50 கோடியை கடந்து சாதனை புரிந்தது. இப்போது இப்படம் ஆகஸ்ட் 22-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
படத்தின் ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமம் வெளியீடுக்கு முன்பே விற்கப்பட்டுள்ளன. முழுமையாக குடும்பத்தை மையப்படுத்திய படம் என்பதால் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் காமெடி காட்சிகளும் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்றுள்ளன.
பாண்டிராஜ் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நித்யா மேனன், ஆர்.கே.சுரேஷ், செம்பியன் வினோத், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சத்யஜோதி நிறுவனம் தயாரித்த இப்படத்தின் ஒளிப்பதிவாளராக சுகுமார், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணிபுரிந்துள்ளனர்.