அல்லு அர்ஜுன் – அட்லி படத்துக்கு 100 நாள் கால்ஷீட்டை ஒதுக்கிய தீபிகா படுகோன்
‘புஷ்பா 2’க்கு பின் அல்லு அர்ஜுன் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கி வருகிறார் அட்லி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த மிகப்பெரிய படத்தில் நாயகியாக தீபிகா படுகோன் நடிக்கிறார்.
ஜான்வி கபூர், மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட நடிகைகளும் இதில் இணைந்துள்ளனர். அல்லு அர்ஜுன் ஒரே படத்தில் நான்கு விதமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய தொழில்நுட்பங்கள் இதில் பயன்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த படத்துக்காக தீபிகா படுகோன் 100 நாட்கள் கால்ஷீட்டை ஒதுக்கியுள்ளார். அவரின் படப்பிடிப்பு நவம்பர் மாதத்தில் தொடங்க உள்ளது. இதில் அவர் ஆக்ஷன் காட்சிகளிலும் நடிக்க உள்ளார்.
தீபிகாவின் கதாபாத்திரம் ஆயுதம் ஏந்திய வீராங்கனை போல உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ‘அவதார்’ படத்தைப் போல், இரண்டு தனித்துவமான பிரபஞ்சங்களில் கதை நகரும் என்று கூறப்படுகிறது.