நம்பிக்கையில்லாமல் நடித்த அனுபமா!

தனுஷின் கொடி, அதர்வா இணைந்து நடித்த தள்ளிப்போகாதே, ஜெயம் ரவியின் சைரன், பிரதீப் ரங்கநாதனின் டிராகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன்.

மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துவரும் அவர், கடந்த ஆண்டு வெளியான தெலுங்கு படம் தில்லு ஸ்கொயர் மூலம் வெற்றியை பெற்றார். அந்தப் படத்தில் அவரது நடிப்பு பாராட்டுகளை பெற்றதோடு, விமர்சனங்களும் எழுந்தன. இதனால், இனி அந்த மாதிரியான வேடங்களில் நடிக்க விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அனுபமா கூறியதாவது:

தில்லு ஸ்கொயர் படத்தில் நான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தை இப்போது மீண்டும் செய்யச் சொன்னால் மறுக்கிறேன். அதை சரியாக வெளிப்படுத்தும் தன்னம்பிக்கை எனக்கில்லை. அந்த வேடத்துக்கான சரியான நீதி செய்வது குறித்து தொடர்ந்து சிந்தனை மற்றும் பதட்டம் இருந்தது.

அந்த கதாபாத்திரத்தில் நம்பிக்கையின்றி தான் நடித்தேன். அந்தக் கதாபாத்திரத்தின் வலிமையை என்னால் சுமக்க முடியவில்லை. படம் முடியும் வரை பயத்துடன் இருந்தேன். இருப்பினும், ரசிகர்கள் என் நடிப்பை பாராட்டியதே எனக்கு நிம்மதியை அளித்தது*” என தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box