விஜய் – ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணி மீண்டும் சாத்தியமில்லாதது ஏன்?
விஜய் – ஏ.ஆர். முருகதாஸ் இணைந்து மீண்டும் ஒரு திரைப்படத்தில் பணியாற்றுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
‘சர்கார்’ படத்திற்கு பின், சன் பிக்சர்ஸ் – விஜய் – ஏ.ஆர். முருகதாஸ் மூவரும் ஒன்றிணைந்து படம் எடுக்க திட்டமிட்டிருந்தனர். அப்போது முருகதாஸ் கூறிய கதை விஜய்க்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் தகவல். ஆனால் அன்றைய சந்தை நிலைமைகள் மற்றும் பிற காரணிகளை கருதி, விஜய் – நெல்சன் கூட்டணியில் ‘பீஸ்ட்’ படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க முடிவு செய்தது.
முன்னதாக ‘துப்பாக்கி’, ‘கத்தி’, ‘சர்கார்’ போன்ற வெற்றிப் படங்களில் இணைந்திருந்ததால், இந்த கூட்டணிக்கு எப்போதும் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இருந்தாலும் தற்போது விஜய் அரசியலில் முழுமையாக ஈடுபட்டு வருவதால், இவர்களது கூட்டணி மீண்டும் உருவாகும் வாய்ப்பு மிகக் குறைவு எனத் தெளிவாகிறது.
இதேவேளை, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘மதராஸி’. இதில் ருக்மணி வசந்த், ஜெயராம், பிஜு மேனன், விக்ராந்த், வித்யூத் ஜாம்வால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 5 அன்று திரைக்கு வரும் நிலையில், ஆகஸ்ட் 24 அன்று இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீடு நடைபெறவுள்ளது.