‘விஸ்வம்பரா’ டீசர் – சிரஞ்சீவியின் மாஸ் அட்டகாசம், ஆனால் வன்முறை அள்ளளவாக!
சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வம்பரா’ படத்தின் புதிய டீசர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் வசிஷ்டா இயக்கத்தில் சிரஞ்சீவி, த்ரிஷா, ஆஷிகா ரங்கநாத், குணால் கபூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த மாபெரும் படம், கடந்த மாதங்களில் வெளியான முதல் டீசருக்குப் பிறகு கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து, கிராபிக்ஸ் காட்சிகளை மேம்படுத்தும் பணிகளில் படக்குழு ஈடுபட்டது. அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் படம் வெளியாகும் நிலையில், தற்போது புதிய டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
டீசரில் என்ன? – ஒரு குழந்தைக்குக் கதை சொல்வதுபோல தொடங்கும் வாய்ஸ் ஓவர், போரின் பின்னணியில் நகர்கிறது. ஃபேண்டஸி, ஆன்மீகம், போர்க்களம் போன்ற அம்சங்களை உள்ளடக்கிய இந்த காட்சிகளில், அதைவிட வன்முறை காட்சிகளே கணிசமாகத் தெரியின்றன. துண்டாக பறக்கும் கை, நெஞ்சை துளைக்கும் ஈட்டி, ஹீரோவின் கையில் தோன்றும் கண் போன்ற காட்சிகள், ஒரு நிமிட டீசரிலேயே இரத்தம் பொழியும் காட்சிகளால் நிரம்பியுள்ளன.
சிரஞ்சீவியின் மாஸ் அறிமுகம், கீரவாணியின் தீவிரமான பின்னணி இசை, புழுதி பறக்கும் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளன.