பாலிவுட் ஊடகங்கள் கூறுவதப்படி, இயக்குநர் மித்ரன் அடுத்ததாக ஒரு இந்திப் படத்தை இயக்கவிருக்கிறார்.

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ படத்தை மித்ரன் இயக்கி முடித்துள்ளார். இதன் இறுதிக்கட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படம் எப்போது வெளியிடப்படும் என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. இந்த படப்பணிகள் முடிந்தவுடன், மித்ரன் தனது அடுத்த முயற்சியாக இந்திப் படத்தை இயக்கப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை பாலிவுட் ஊடகங்கள் உறுதி செய்துள்ளன.

முதலில், ஷாபினா கான் மற்றும் சஞ்சய் லீலா பன்சாலி தயாரிப்பில் ‘ரவுடி ரத்தோர் 2’ என்ற பெயரில் ஒரு படம் தொடங்கப்பட்டது. ஆனால், அப்பணிகள் எதிர்பார்த்தபடி நடைபெறவில்லை. மேலும், முதல் பாகத்தின் உரிமை டிஸ்னி நிறுவனத்திடம் இருந்ததால், பேச்சுவார்த்தையும் சுமுகமாக முடியவில்லை. இதனால் அந்தப் படம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், அந்தக் கதையை ‘ரவுடி ரத்தோர் 2’ என்ற பெயரால் அல்லாமல் புதிய பெயரில் உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் இருந்த அனைத்து அம்சங்களையும் நீக்கி, புதிய கதையாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை மித்ரன் இயக்கவுள்ளார். இதன் படப்பணிகள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook Comments Box