சிரஞ்சீவி – அனில் ரவிப்புடி படத்தலைப்பு க்ளிம்ஸ் வீடியோ வெளியீடு!
சிரஞ்சீவி – அனில் ரவிப்புடி இணைந்துள்ள படத்திற்கு ‘மனா சங்கராவர பிரசாத் காரு’ என்று தலைப்பு நிகர்படுத்தப்பட்டுள்ளது.
‘விஸ்வம்பரா’ படத்துக்குப் பிறகு அனில் ரவிப்புடி இயக்கும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிரஞ்சீவி. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. தற்போதைய நிலையில் படத்துக்கு ‘மனா சங்கராவர பிரசாத் காரு’ என தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிரஞ்சீவி பிறந்த நாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், படத்திலிருந்து சிறிய க்ளிம்ஸ் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இதில் நயன்தாரா, கத்ரீன் தெரசா உள்ளிட்ட பலர் சிரஞ்சீவியுடன் நடித்து வருகிறார்கள். முழுக்க காமெடி கலந்த படமாக உருவாகி வருகிறது.
சமீபத்தில் தெலுங்கில் நடைபெற்று வரும் வேலை நிறுத்தத்தால் இதன் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. தற்போது பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டதால், படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் தொடர் படப்பிடிப்பு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.