‘ஒப்பம்’ இந்தி ரீமேக்கின் ஷூட்டிங் ஆரம்பம்
அக்ஷய் குமார் – சைஃப் அலி கான் இணைந்து நடிக்கும் ‘ஒப்பம்’ இந்தி ரீமேக்கின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
பிரியதர்ஷன் இயக்கும் இந்த புதிய படத்தில், அக்ஷய் குமார் மற்றும் சைஃப் அலி கான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். ‘ஹைவான்’ என்ற பெயரில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் துவங்கியது. மும்பை, கொச்சி மற்றும் ஊட்டி ஆகிய நகரங்களில் இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற உள்ளது.
17 ஆண்டுகளுக்குப் பிறகு அக்ஷய் குமார் மற்றும் சைஃப் அலி கான் மீண்டும் ஒரே படத்தில் சேர்ந்து நடிக்கிறார்கள். இப்படத்தை கே.வி.என் நிறுவனம் மற்றும் தெஸ்பியன் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடித்து, அடுத்தாண்டு இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
மோகன்லால், சமுத்திரக்கனி, நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்த, பிரியதர்ஷன் இயக்கிய படம் ‘ஒப்பம்’ 2016-ஆம் ஆண்டு வெளியானது. பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது அதையே ‘ஹைவான்’ என்ற தலைப்பில் இந்தியில் ரீமேக் செய்து வருகிறார் பிரியதர்ஷன்.