சச்சின் பாராட்டிய ‘3BHK’ – படக்குழுவினருக்கு மகிழ்ச்சி

இந்திய கிரிக்கெட் லெஜண்ட் சச்சின் டெண்டுல்கர், சமீபத்தில் ரசிகர்களுடன் ஆன்லைனில் உரையாடிய போது, ‘3BHK’ திரைப்படம் பிடித்தது என்று தெரிவித்துள்ளார். இதனால் அந்தப் படக்குழுவினர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

ஒரு ரசிகர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த சச்சின், “எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் திரைப்படங்களை ரசிப்பேன். சமீபத்தில் பார்த்ததில் மிகவும் பிடித்தவை ‘3BHK’ மற்றும் ‘ஆட்டா தம்பாய்ச் நாய்’” என்று குறிப்பிட்டார்.

இந்த கருத்து வெளியாகியதும், ‘3BHK’ படத்தின் தயாரிப்பாளர் அருண் விஸ்வா, “இதை எவ்வாறு சொல்வது என்று வார்த்தைகள் தேடி வருகிறேன். இது எனது கற்பனைக்குக் கூட எட்டாத ஒரு தருணம்” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

ஸ்ரீகணேஷ் இயக்கிய இப்படத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, மீதா ரகுநாத், சைத்ரா அச்சர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அம்ரித் ராம்நாத் இசையமைத்து, அருண் விஸ்வா தயாரித்த இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றியை பெற்றது.

Facebook Comments Box