“அனிருத் என்றாலே ஹிட் மெஷின்” – மதராஸி புரோமோவில் சிவகார்த்திகேயன்
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் மதராஸி திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ளது. ருக்மணி வசந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன் உள்ளிட்டோர் இதில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
புரோமோஷன் நிகழ்வில் பேசும் போது சிவகார்த்திகேயன், “முருகதாஸ் சார் இயக்கத்தில் நடிப்பது எனக்கு பெரும் சந்தோஷம். என் நெருங்கிய நண்பர் அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். அனிருத் என்றாலே ஹிட் மெஷின்; அவர் கொடுக்கும் பாடல்கள் எப்போதும் சூப்பர் ஹிட். பிஜிஎம் அசத்தலாக இருக்கும். அதனால் இந்தப் படம் கண்டிப்பாக ஹிட் ஆகும்” என தெரிவித்துள்ளார்.
Facebook Comments Box