செப்டம்பர் 12-ல் திரைக்கு வரும் பிளாக்மெயில்

ஜி.வி. பிரகாஷ் குமார், தேஜு அஸ்வினி, பிந்து மாதவி, ஸ்ரீகாந்த், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள திரைப்படம் பிளாக்மெயில். இதனை இயக்கியிருப்பவர் மு. மாறன்.

ஜேடிஎஸ் பிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் சாம் சி.எஸ். ஆரம்பத்தில் இந்த படம் ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் வெளியீடு தாமதமானது.

இந்நிலையில், புதிய தேதி நிர்ணயிக்கப்பட்டு, வரும் செப்டம்பர் 12-ம் தேதி பிளாக்மெயில் படத்தை திரையரங்குகளில் வெளியிடப்பட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

Facebook Comments Box