ஹீரோவாக மாறிய முனீஷ்காந்த்

காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் தொடர்ந்து கவனம் பெற்றுவரும் முனீஷ்காந்த், இப்போது நாயகனாக நடிக்கிறார். அவரை முன்னிலைப்படுத்தி இயக்குநர் லோகேஷ் குமார் கிராமப்புறக் கதைக்களத்தில் அமைந்த டார்க் காமெடி படத்தை உருவாக்குகிறார்.

இந்த படத்தில் ருத்ரன் பிரவீன், ஷாதிகா, மவுரிஷ் தாஸ், அஷ்வின், நாகராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தலைப்பு இன்னும் அறிவிக்கப்படாத இப்படத்தின் ஆரம்பக் கட்ட படப்பிடிப்பு, மதுரை அருகே உள்ள வாடிபட்டி பகுதியில் முடிவடைந்துள்ளது.

படம் குறித்து இயக்குநர் லோகேஷ் குமார் கூறியதாவது:

“இன்றைய சூழலில், வட்டி கொடுக்கும் நடைமுறை வங்கியைத் தாண்டி, மொபைல் ஆப்ஸ்களுக்கும் வந்துவிட்டது. சாதாரண மக்களுக்கு எளிதாகக் கிடைக்கும் கந்துவட்டி, எவ்வாறு அவர்களை சிக்கவைக்கிறது என்பதை நகைச்சுவையுடன் கூடிய சுவாரஸ்யமான சம்பவங்களின் மூலம் திரைக்கதையில் வெளிப்படுத்தியுள்ளோம்” என்றார்.

Facebook Comments Box