இயக்குநராக அறிமுகமாகும் ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா
விஜய் ஆண்டனி நடித்த சலீம் திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் கணேஷ் சந்திரா. பின்னர் ஜெயில், காரி, தெலுங்கு படம் மிஸ் மேட்ச் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். தற்போது அவர் இயக்குநராக அறிமுகமாகிறார்.
அவர் இயக்கியும், ஒளிப்பதிவும் செய்யும் புதிய படத்துக்கு ‘பூக்கி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் அஜய் திஷன் கதாநாயகனாகவும், தனுஷா கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். மேலும் பாண்டியராஜன், சுனில், இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இது ரொமான்ஸ் காமெடி கதையாக உருவாகிறது. விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி இப்படத்தை தயாரிக்கிறார். சென்னையில் நடைபெற்ற பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது.
படத்தைப் பற்றி இயக்குநர் கணேஷ் சந்திரா கூறியதாவது:
“இன்றைய தலைமுறையின் காதல் பிரச்சினைகளுக்கு அவர்களே காரணமாக இருக்கிறார்கள். அந்த நிலையை மையமாகக் கொண்டு, காதல் கலந்த நகைச்சுவை படமாக பூக்கி உருவாகிறது” என்றார்.
இப்படத்திற்கு இசையமைக்கிறார் விஜய் ஆண்டனி. சென்னை மற்றும் பெங்களூரில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடைபெறுகிறது.