இயக்குநர் ஹெச்.வினோத் பிறந்தநாள் – ‘ஜனநாயகன்’ படக்குழுவின் சிறப்பு வீடியோ

இயக்குநர் ஹெச்.வினோத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, விஜய் நடித்துவரும் ‘ஜனநாயகன்’ படக்குழு, படப்பிடிப்பு காட்சிகளை உள்ளடக்கிய ஒரு சிறப்பு வீடியோவை வெளியிட்டுள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில், விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படம், அவர் அரசியலில் முழுமையாக ஈடுபடுவதற்கு முன் வெளியிடும் கடைசி திரைப்படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கே.வி.என் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில், விஜய் உடன் பாபி தியோல், பூஜா ஹெக்டே, கவுதம் மேனன், பிரியாமணி, மமிதா பைஜு உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக அனிருத் பணியாற்றி வருகிறார்கள்.

ஹெச்.வினோத், சதுரங்க வேட்டை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். பின்னர் தீரன் அதிகாரம் ஒன்று படத்தையும், அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு போன்ற படங்களையும் இயக்கி வெற்றி பெற்றார். தற்போது, அவர் விஜய்யுடன் ‘ஜனநாயகன்’ படத்தை இயக்கி வருகிறார்.

Facebook Comments Box