‘எஃப் 1’ ரீமேக்கில் நடிக்க சிறந்தவர் அஜித்: நரேன் கார்த்திகேயன்

‘எஃப் 1’ ஹாலிவுட் படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜித் தான் மிகுந்த பொருத்தமுடையவர் என்று இந்தியாவின் முதல் எஃப்1 ரேசர் நரேன் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற விளையாட்டு சார்ந்த திரைப்பட விழாவில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்ததும் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அப்போது, உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்ற ‘எஃப் 1’ படத்தின் தமிழ் பதிப்பில் யார் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று கேட்டனர். அதற்கு நரேன் கார்த்திகேயன்,

“நிச்சயமாக அஜித் தான். அவருக்கு அது மிகுந்த பொருத்தமாக இருக்கும். 50 வயதிலும் தொடர்ந்து பல ரேஸ்களில் பங்கேற்கிறார். இந்த வயதிலும் கார் பந்தயத்துக்கான ஆர்வம் குறையாமல் அதிகரித்தே வருகிறது. நானும் அவரும் 25 ஆண்டுகளாக நண்பர்கள்.

இந்தியாவில் மோட்டார் விளையாட்டை பரவலாக அறிமுகப்படுத்தி வருகிறார். அவருடன் நானும் இப்போது பயணிக்கிறேன். இருவரும் சேர்ந்து வெற்றிக்கான பாதையை அமைத்துக் கொண்டு வருகிறோம்” என்று கூறினார்.

Facebook Comments Box