‘இரவின் விழிகள்’ – வலைதளத்தை மையமாகக் கொண்ட சைக்கோ த்ரில்லர்

மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில், மகேந்திரா நாயகனாகவும், சிக்கல் ராஜேஷ் இயக்கியுள்ள திரைப்படம் ‘இரவின் விழிகள்’. நாயகியாக நீமா ரே நடித்துள்ளார். இவர் கன்னடத்தில் வெளிவந்த பிங்காரா படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர்.

இந்தப் படத்தில் நிழல்கள் ரவி, மஸ்காரா அஸ்மிதா, கும்தாஜ், சேரன் ராஜ், சிசர் மனோகர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஏ.எம். அசார் இசையமைக்க, பாஸ்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். வலைத்தளங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த சைக்கோ த்ரில்லர் படத்துக்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இம்மாத இறுதியிலோ அல்லது அக்டோபர் முதல் வாரத்திலோ படம் வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Facebook Comments Box